Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, 4 September 2012

தோனியை விடுங்க... வேறு ஏதாவது பேசுங்க: சீறுகிறார்

நடிகை லட்சுமிராயையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியையும் இணைத்து, ஆரம்பத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியாயின. சாக்ஷிக்கும், தோனிக்கும் திருமணமான பின், இந்த கிசுகிசுக்களும் மறைந்து விட்டன. ஆனால், லட்சுமி ராயை சந்திக்கும் அனைவரும், தோனி விவகாரத்தை பற்றியே விசாரிப்பதால், வெறுத்துப் போயிருக்கிறார், லட்சுமி. நானும், தோனியும், ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். பரஸ்பரம், ஹலோ கூறி, நலம் விசாரித்துக் கொண்டோம். தோனி எனக்கு, நல்ல நண்பர். நட்பை தாண்டி, எங்களுக்குள் எந்த விஷயமும் இல்லை. ஆனால், என்னை சந்திக்கும் சிலர், மீண்டும், மீண்டும் தோனியைப் பற்றியே கேட்பதால், கடும் எரிச்சல் ஏற்படுகிறது என, கோபம் கொப்பளிக்க பேசுகிறார், லட்சுமி ராய்.