Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 7 September 2012

கலக்க வருகிறார் பவர்ஸ்டார் தில்லு முல்லு ரீமேக்கில்

1981ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது இந்தப் படம் மீண்டும் ரீமேக் செய்யப்டுகிறது. ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும்(சென்னை-600028), மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர். மேலும் தேங்காய் சீனிவாசனுக்கு பதிலாக பிரகாஷ்ராஜூம், சவுகார் ஜானகிக்கு பதிலாக கோவை சரளாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் நாகேஷ் நடித்த வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருக்கிறார். முந்தய தில்லு முல்லு படத்தில் நாகேஷ் முக்கிய வேடம் ஏற்றிருப்பார். இவரின் வழிகாட்டுதலின் பேரில்தான் ரஜினிகாந்த் அத்தனை தில்லுமுல்லையும் செய்வார். தற்போது இவ்வேடத்தை பவர்ஸ்டார் ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் தில்லுமுல்லு ரீமேக்கை வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்குகிறார். இப்படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து முதன் முறையாக இசையமைக்கின்றனர்.