Friday, 7 September 2012
அயன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான்!
ரவுடி ரத்தோர் வெற்றிக்குப் பிறகு பிரபு தேவா தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தற்போது இந்தியில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக சல்மான் கானுடன் கைகோர்க்க இருக்கிறார். இந்த முறையும் அவர் தமிழில் வெற்றிபெற்ற படத்தையே இந்தியில் ரீமேக் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன படமென்றால் சூர்யா நடிப்பில் வெளியான அயன்தான். ஏனெனில், அயன் திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் சல்மானுக்கு ஏற்றதாக இருக்கும் என பிரபு தேவா கருதுகிறார். இதுவே இந்தி ரீமேக்கிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்னு கூறப்படுகிறது. எனவே, இதற்கான அதிகாரப்பூர்வ அறிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. முன்னதாக பிரபு தேவா - சல்மான் கான் கூட்டணியில் இந்தியில் உருவான வான்டட் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
],
sirakugal news