போராளியின் வெற்றி குறித்து சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும்,சசிக்குமாரை ஒரு நடிகராக, அதுவும் ஆக்�ஷன் ஹீரோவாக உயர்த்தியிருக்கிறது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
இதை தெளிவாகப்புரிந்து கொண்ட சசி ,இனி கொஞ்ச காலத்துக்கு நடிப்பு ரூட்டிலேயே பயணம் செய்வது என்று தெளிவான முடிவு எடுத்து விட்டார். அவர் ஏற்கனவே நடித்துவரும் மாஸ்டர்ஸ் மலையாளப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு வந்து விட்ட நிலையில்,இவரது உதவியாளர் பிரபு இயக்கும் படத்தை சசியே தயாரித்து நடிக்கிறார். இதுதவிர ஓய்வு நேரங்களில் யார் வந்தாலும் அசராமல் கதை கேட்கிறார். மாஸ்டர்ஸ் படத்தில் நிருபராக நடிக்கும் சசிக்கு ஜோடி இல்லை.