Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 3 December 2011

விழாவிற்கு வரமாட்டார் அஜித்...

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வெளிவந்து வெற்றி பெற்று 100 நாட்கள் முழுமையடையப் போகும் படம் “மங்காத்தா”. இந்த படத்தில் அஜித்-அர்ஜூன் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் லட்சுமிராய், ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி அமரன், வைபவ் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக கருதப்படும் படம் “மங்காத்தா”. இப்படிப்பட்ட படத்திற்கு 100-வது நாள் கொண்டாடாமல் விட்டதன் காரணம் பற்றி தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியிடம் கேட்ட போது, “அஜித் சார் இது போன்ற பொது விழாக்களில் கலந்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர். எனவே படத்தின் வெற்றிக்கு காரணமான கதாநாயகன் இல்லாமல் 100-வது நாள் விழா கொண்டாடி எந்த உபயோகமும் இல்லை” என்று கூறினார்.

மங்காத்தா திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்ததும், 100-வது நாளை அடைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.