
நடிகர் தனுஷின் ’மயக்கம் என்ன’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.
தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகாவா? இல்லை ஜெனீலியாவா? என்ற கேள்வி இருந்தது, இப்போது நடிகை காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காஜல்அகர்வால் இப்போது சூர்யாவின் ‘மாற்றான்’ படத்தில் பிஸியாக உள்ளார்.
மாரீசன் என்பவன் ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்தவன். இராவணன் சீதா தேவியை கொண்டு செல்ல உறுதுணையாக இருந்தவன் என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
இப்படத்தை UTV மோஷன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.