Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 13 November 2011

அஜித்-விஜய் இணைந்து படமா?

தமிழ் சினிமாவில் தமிழ்ப்படம் என்ற நகைச்சுவை படத்தை உருவாக்கி முதல் படத்திலேயே எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் அமுதன்.

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் அமுதன், அஜித் மற்றும் விஜய் அகியோரை இணைத்து படம் எடுக்கப் போவதாக வதந்தி நிலவிக்கொண்டிருந்தது. இந்த செய்தியை அமுதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் தனது அடுத்த படைப்பாக ’இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் கிட்டத்தட்ட தனது முதல் படத்தின் பாணியில் ஒரு படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலுக்கு கீழே அவர்” A period, sci-fi action thriller with animation, romance and NO SPOOFS" என்று குறிப்பிட்டிருப்பது மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குனர்களின் புதிய முயற்ச்சிக்கேற்ப நடித்து மாறுபட்ட வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் விமல் இந்த படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமலுடன் அரவிந்த் ஆகாஷ் மற்றும் ரிச்சர்டு இணைகிறார்கள்.

இந்த படம் 2012ல் வெளிவரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

Labels: Ajith-Vijay