Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களில் சிபிஐ சோதனை

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில், மும்பையிலுள்ள வோடபோன் மற்றும் குர்காவ்னில் உள்ள ஏர் டெல் அலுவலகங்களில் சிபிஐ போலீஸôர் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்தாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில் 2001-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது. பாரதிய ஐனதா தலைமையிலான தேசிய ஐனநாயக கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்தார். அவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது காலத்திலும் முறைகேடுகள் நடந்தாகக் கூறப்படுகிறது.

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் ஷியாமல் கோஷ், மற்றும் பாரத் சஞ்சார் நிஹாம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜே.ஆர்.குப்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மும்பையிலுள்ள வோடபோன் மற்றும் குர்காவ்னில் உள்ள ஏர்டெல் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். குப்தா மற்றும் ஷியாமல் கோஷ் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

சிபிஐ போலீஸôரின் சோதனைக் குறித்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

முறைகேடுகள் இல்லை : ""ஏர்டெல் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசைகள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த முறைகேடுகளும் இல்லை. இது தொடர்பாக முறையாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிப்போம் ''என்று ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை குறித்து வோடோபோன் நிறுவன அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "" எங்களுக்கு அலைக்கற்றைகள் விதிமுறைகள் படியே முறையாக ஒதுக்கப்பட்டுள்ளன. சிபிஐ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். மும்பை மற்றும் தில்லியில் உள்ள அலுவலகங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை காலை வந்தனர். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சில தகவல்களை அதிகாரிகள் கேட்டனர் '' என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ போலீஸôர், பூர்வாங்க விசாரணையை தொடங்கியுள்ளனர். பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இப்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது பதவி காலத்தில் ( 2001-2003) 4.4 மெகாஹெர்ட்ஸ் என்ற அளவிலிருந்து 6.2 மெகா ஹெர்ட்ஸ் ஆக அதிகரிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ பதிவு செய்துள்ளது. இதைத் தவிர, வாடிக்கையாளர் அடிப்படையிலான முறையில் கூடுதல் அலைக்கற்றைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏர்செல்-மாக்ஸிஸ் விவாகாரத்தில், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை
சோதனை நடத்திய ஏர்டெல் அலுவலகம்.
Email PrintDelicious