Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

குற்றால அருவிகளில் குளிக்க ஆண்களுக்கு தடை

காத்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் சிவனை நினைத்து வழிபட்டு பூஜை செய்தால், தங்களின் கணவனின் ஆயுள் நீடித்து மாங்கல்யம் பலம் கூடும் என்பது திருமணம் ஆன பெண்களின் நம்பிக்கை. இதன்படி கார்த்திகை மாதம் முதல் திங்கள் கிழமையான இன்று, நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் குவிந்தனர்.


பின்னர் குற்றாலம் அருவிகளில் புனித நீராடி, கரையில் உள்ள விநாயகரை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தனர்.


அதிகாலை முதலே அதிகமான பெண்கள் குற்றாலம் வந்து அருவிகளில் குளிக்க ஆரம்பித்ததால், அருவியில் குளிக்க ஆண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டது தெரியாமல், அருவியில் குளிக்க வந்த ஆண்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரவு 12 மணி முதல் திருப்பி அனுப்பினர். பின்னர் காலை 8 மணிக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


பெண்கள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்துள்ளதால் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: குற்றாலம்