தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனலை தொடங்க நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார். பவர் நியூஸ் என்ற பெயரில் தொடங்கப்படும் அந்த சேனல், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22ம்தேதி ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கிறது. பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் சீரஞ்சிவி. ஆந்திர படவுலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வரும் அவர் சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, நடுநிலையான செய்தி சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என் லட்சியங்களில் ஒன்று. அது கைகூடும் நாள் வெகு தொலைவில் இல்லை, என சேனல் ரகசியம் குறித்த செய்தியை கசிய விட்டிருக்கிறார் சிரஞ்சீவி.
Tags » Chiranjeevi