Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

`சாதிக்கலாம் வாங்க' நம்ம மக்கள் தொலைக்காட்சியில்


மக்கள் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி, `சாதிக்கலாம் வாங்க. பதினெண் பருவம் எனப்படும் இந்த பதினைந்து வயதில் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் விதைக்கப்படும் விதை தான், அவனது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் கருவியாக அமைகிறது. அந்த கருவியை இயக்க ஒரு தூண்டல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற விதையை விதைத்து அந்த விதையை தூண்டி விடும் வேலையைத்தான் மக்கள் தொலைக் காட்சி தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. சாதிக்க நினைப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், நம்மால் சாதிக்க முடியுமா? என நினைப்பவர்களுக்குமான நிகழ்ச்சிதான் `சாதிக்கலாம் வாங்க. கல்வியையும் தொலைக்காட்சி வழியாக கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு கடினமான விஷயமே அல்ல என மாணவர்களுக்கு புரிய வைப்பது இதில் முதல் முயற்சி. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என எளிமையான முறையில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.மாணவர்களை நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த ஐந்து நாட்களில் எவையேனும் ஒன்றை தவறவிடும் மாணவர்களுக்காக, இந்த ஐந்து நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் தொகுப்பு மற்றும் மறு ஆய்வு சனிக்கிழமையன்று ஒளிபரப்பப்படுகிறது. ஞாயிறு அன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க, மனநிலை சீராக செயல்பட அவர்களுக்கு மனவளக்கலை என்ற பகுதியையும் கொண்டுள்ளது. இதில் உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் மனபலம் பெறுவது மட்டுமல்லாமல், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற இந்த பகுதி உறுதுணையாக இருக்கும்.
Tags »
New program, makkal T.V., மக்கள் டி.வி., சாதிக்கலாம் வாங்க,