Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 21 November 2011

இறந்தது இந்தியாவின் கடைசி சைபீரிய புலி

உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் உயிரியல் பூங்காவில், இந்தியாவின் கடைசி சைபீரிய புலியான குணால் மரணமடைந்துள்ளது உயிரியல் ஆர்வலர்களை பெரும் கலக்கமடைய செய்துள்ளது. 1997ம் ஆண்டு, குணால் மற்றும் மகேஷ் எனும் 2 சைபீரிய புலிகள், டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிலிருந்து நைனிடால் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இதில், ‌மகேஷ் பெயர் கொண்ட புலி, கடந்த 2001ம் ஆண்டில் மரணமடைந்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள கடைசி சைபீரிய புலி என்ற பெருமையை குணால் புலி பெற்றது. வயது மூப்பு காரணமாக, குணால் புலியும் மரணமடைந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.