Monday, 21 November 2011
இன்ஜி.,தேர்வு வினாத்தாள் லீக் நெல்லை அண்ணா.,பல்கலையில் பரபரப்பு
நெல்லை அண்ணா.,தொழில்நுட்ப பல்கலை., இன்ஜி., கணித தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக வெளியான தகவலால் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கணித வினாத்தாள் "லீக்' ஆகவில்லை என துணைவேந்தர் ராஜாராம் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலை., 2ம் ஆண்டு கணித பாடத்திற்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்விற்கான வினாத்தாள் நேற்று காலை 8.45மணிக்கு வெளியானதாக மாணவர்கள் மத்தியில் தகவல் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலை., நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாற்று வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடந்தது. நாகர்கோவிலில் உள்ள ஒரே ஒரு இன்ஜி., கல்லூரியில் பிரிண்டர் பிரச்னை காரணமாக 20 நிமிடம் தாமதமாக தேர்வு துவங்கியது. இது குறித்து நெல்லை அண்ணா பல்கலை., துணை வேந்தர் ராஜாராம் கூறியதாவது; நாகர்கோவிலில் உள்ள இன்ஜி., கல்லூரியில் வினாத்தாள் "லீக்'ஆனதாக தகவல் வந்ததது. இந்த தகவல் குறித்து விசாரித்த போது வினாத்தாள் "லீக்'ஆகவில்லை.இது வதந்தி என்பது தெரிய வந்தது. இருப்பினும் வேறு வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. பல்கலைக்குட்பட்ட அனைத்து இன்ஜி., கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி கணித பாடத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. ஒரு ஒரே கல்லூரியில் மட்டும் பிரிண்டர் பிரச்னை காரணமாக 20 நிமிடம் தாமதமாக தேர்வு நடந்தது. இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.