Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 24 November 2011

கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள்

காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்பட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் சார்மி. இந்தியில் புத்தா ஹோகா படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ரூல்லா ரூந்தாபாத் என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் அந்த படத்தில் சார்மியை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விவேக் ஓபராய் சொன்னதாகவும் இதையடுத்து அவரை இயக்குனர் நீக்கியதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து சார்மி கூறியதாவது: என்னை நீக்க விவேக் ஓபராய் சொன்னதாக ஒரு சம்பவமே நடக்கவில்லை. படத்தின் ஸ்கிரிப்ட் படித்தேன். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதற்குள் ஐதராபாத் சென்றுவிட்டேன். பிறகு காஸ்டியூம் டெஸ்ட்டுக்காக மீண்டும் மும்பை வந்தேன். அப்போதுதான் படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். அதற்குள் வதந்தி பரப்பியதை அறிந்து இருவரும் சிரித்தோம்.
படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இரண்டு ஹீரோயின்களில் நானும் ஒருத்தி. கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை. தேவையில்லாமல் கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள். அதைப்போலதான் இதுவும் என்கிறார் சார்மி.