Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

காலி நகைப்பெட்டி: சென்னை ஏர்போட்டில் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் புறப்பாடு நுழைவு வாயில் அருகே இன்று காலை நகை பெட்டி ஒன்று கிடந்தது.

இது குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டும் யாரும் வராததால் அந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என்று பயணிகள் பீதி அடைந்தனர்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் விரைந்து வந்து பாதுகாப்புடன் நகைப்பெட்டியை எடுத்து சோதனை செய்தனர்.

அதில், காலி நகைப்பெட்டியை யாரோ வீசி சென்றிருப்பது தெரிந்தது. இதனால் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.