Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

விஜய் டி.வி.யில் மீண்டும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆரம்பம்!


விஜய் டி.வி.யில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, நேயர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா. இதில் ஆயிரக்கணக்கான திறமைவாய்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான பிரபுதேவா நேரில் வந்து, அடுத்த பிரபுதேவாவை தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து விஜய் டி.வி.மீண்டும் உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியை துவங்குகிறது. இதற்கான நேர்முகத்‌தேர்வு கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நவம்பர் 20ம் தேதி (இன்று) நடைபெறுகிறது.


கோவையில், பீளமேடு, நேஷ்னல் மாடல் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளியிலும், மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகேயுள்ள ஓரியண்டல் இன்ஸ்டிடுயூட் ஆஃப் காட்டரிங் டெக்னாலஜியிலும், திருச்சியில் சத்திரம் பஸ்நிலையம் அருகே, செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதில் 14 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபிக்கலாம். நடனமாட வருபவர்கள் தாங்கள் நடனமாடப்போகும் பாடலை அல்லது இசையை தனியாக ஒரு சி.டி.யில் கொண்டு வர வேண்டும்.


Tags: Vijay t.v., Ungalil yaar Adutha Prabhudeva, season 2, விஜய் டி.வி., உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, சீசன்-2,