Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.51.34 ஆக சரிந்துள்ளது. கடந்த 32 மாதங்களில் ரூபாயின் மதிப்பு ரூ.51 என்ற அளவுக்கு கீழ் குறைந்திருப்பது இதுவே முதல்முறை.
இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 51.49 என்ற நிலையில் இருந்ததே சமீபகாலத்தில் மிகக் குறைந்த அளவாகும்.
வங்கிகள், இறக்குமதியாளர் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்தே ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி அடையக் காரணம். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்திய பங்குசந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலை, இந்திய சந்தையில் வெளிநாட்டவர் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவது போன்றவையும் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி முக்கியப் பிரச்னையாக உள்ளது. ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்க, கையிருப்பில் உள்ள டாலரை புழக்கத்தில் விடுமாறு பொதுத்துறை வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை ரூ.51.05 என்ற அளவிலேயே முதலில் இருந்தது. பின்னர் மதிப்பு சிறிது உயர்ந்தாலும், மீண்டும் ரூ.51.90 என்ற அளவுக்கு சரிந்தது. இறுதியில் ரூ.51.34 ஆக இருந்தது.
ஐரோப்பிய நாடுகளின் யூரோ, பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங், ஐப்பானின் யென் ஆகிவற்றுக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிந்தது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 90 புள்ளிகள் சரிந்தது. இது 0.55 சதவீத சரிவு ஆகும்.