Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

பெற்றோர்களே! இணையத்தில் உள்ள உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்!

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்திலே பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, ஆண் பெண் உறவு தொடர்பான விளக்கங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் ஏற்படும் கருத்தரிப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தம் பிள்ளைகளுக்கு கூற வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையில் திணிக்கப்பட்டிருக்கின்றது. ஆணுறை பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களும் குழந்தைகள் பருவய வயதினை(டீன் ஏஜ்) எட்டுகின்ற பொழுதுகளில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால் தான் எம் சமூகத்தில் நிகழும் இள வயதுக் கர்ப்பங்களைத் தடுத்து நிறுத்த முடியும்!


உங்கள் பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் தனியான கணினியினைப் பயன்படுத்தக் கொடுக்க வேண்டாம். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் யூஸ் பண்ணக் கூடிய பொதுவான கம்பியூட்டரை வீட்டில் வைத்திருக்கவும்.


கணியினை வரவேற்ப்பறையிலோ அல்லது வீட்டில் உள்ள பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியிலோ வைத்திருங்கள்.


உங்கள் பிள்ளைகள் கணினி முன் உட்காருவதற்கான நேரத்தினை நீங்களே திட்டமிடுங்கள். அதிகளவான நேரத்தினை உங்கள் பிள்ளைகள் கணினி முன் செலவளிக்க விட வேண்டாம்.

*பாலியல் தளங்களை, சாட்டிங் தளங்களை உங்கள் பிள்ளைகள் வீடுகளில் அக்செஸ் பண்ண முடியாதவாறு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்கலாம்.