
மும்பையில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் 100-வது சதத்தை அடித்தால் அவருக்கு 100 தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்க செயலர் இணைச் செயலர் நிதின் தலால் தெரிவித்துள்ளார். முன்னதாக கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் சச்சின் 100-வது சதம் அடித்தால் அவருக்கு 100 தங்க நாணயங்கள் வழங்குவதாக அந்த மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது என்றும் தலால் தெரிவித்தார்.
சச்சின் இதுவரை சர்வதேச 99 சதம் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 48) அடித்துள்ளார். தனது சொந்த ஊரான மும்பையில் அவர் 100-வது சதத்தைப் பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.