
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகை கீதா பசாரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
.
இந்திய அணியில் சுழல்பந்து வீச்சாளராக இடம்பெற்றிருக்கும் ஹர்பஜன்சிங் நடிகை கீதõ பசாரோடு நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. கீதாவை அவர் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஹர்பஜன்சிங் இந்த செய்தியை மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை.
இந்நிலையில் கீதாவை ஹர்பஜன்சிங் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் ஹர்பஜன்சிங் கீதா நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. லண்டனில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
மணமகள் கீதாவுக்கு நெருக்கமானவர்கள் பலர் லண்டனில் இருப்பதாலும், பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க விரும்புவதாலும் ஹர்பஜன்சிங் லண்டனில் திருமண நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதனிடையே மணமகள் கீதா லண்டனுக்கு சென்று நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கு தேவையான புடவைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.