முல்லை பெரியார் அணை குறித்து உருவாக்கப் பட்டுள்ள டேம் 999 என்ற படத்தை திரையிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் தெரிவித்துள்ளார்.
.
இது தொடர்பாக அவர் விடுத்துள் அறிக்கை வருமாறு: முல்லை பெரியாறு அணை தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விரதுநகர் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமானது. முல்லை பெரியாறு அணையை எப்படியாவது இடித்து விட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்பது தான் கேரள அரசின் திட்டமாக இருக்கிறது.
முல்லை பெரியாறு அணை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே பிரதமரிடம் வலியுறுத்துவதும், இந்த அணை குறித்த டேம் 999 திரைப்படத்தை வெளியிட அனுமதித்திருப்பதும் கேரள அரசின் நம்பிக்கை துரோகம்.
இந்த அணையை உடைக்க வேண்டும். அதற்கு மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் தான் டேம் 999 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவில் எங்கும் இந்த திரைப்படத்தை திரையிடு
வதற்கு அனுமதி தர கூடாது என்பதை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் வலியுறுத்துகிறது.
அதனையும் மிறி திரைப்படம் வெளியிடப்பட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நாங்கள் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.