Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 21 November 2011

ஸ்ருதி, அக்ஷரா வாழ்க்கையில் தலையிட மாட்டேன்

என் மகள்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும். அதில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன், என்றார் நடிகையும் கமல்ஹாஸனின் முன்னாள் மனைவியுமான சரிகா. சித்தார்த்-ஸ்ருதி இணைந்து நடித்த 'ஒ மை பிரண்ட்' தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தாய் சரிகாவுடன் வந்திருந்தார் ஸ்ருதி ஹாஸன். சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாஸனும் இருக்கிறார். ஸ்ருதி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்வது மற்றும் அவரது எதிர்காலம் குறித்து சரிகா கூறுகையில், "சினிமாவை தவிர வெளி உலகம் தெரியாதவள் நான். சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடிப்பு என்றுதான் இருந்தேன். படப்பிடிப்பு அரங்குகள்தான் எனக்கு வகுப்பறை. அங்கு என் சீனியர் நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, படிப்பு என வேறு திறமைகளிலும் பளிச்சிடுகின்றனர். இவர்களைப்போல் சிறு வயதில் எனக்கு வாய்ப்பு அமையவில்லை. இப்போது நிலைமைகள் மாறிவிட்டது. ஸ்ருதி சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்ஷராவுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருந்து படம் இயக்க வேண்டும் என்பது அவள் ஆசை. ஸ்ருதியும் அக்ஷராவும் வாழ்க்கையில் சுயமாக முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யலாம். எல்லா பெற்றோர்களுமே குழந்தைகளை சுதந்திரமாக விடவேண்டும். அவர்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சொந்தமாக முடிவுகள் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும். ஸ்ருதியும் அக்ஷராவும் சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கும் முன் என்னிடம் கலந்து பேசுவது உண்டு. ஆலோசனையும் கேட்பார்கள். ஆனால் நான் அவர்களை நிர்ப்பந்திப்பது கிடையாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிடவும் மாட்டேன்," என்றார்.
கமல் குறித்த கேள்விகளைத் தவிர்த்துவிட்டார் சரிகா. மிக நெருக்கமாக இருந்த ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்தும் இப்போது பிரிந்துவிட்ட நிலையில் அவர்கள் நடித்த படம் வெளியாகியுள்ளது. காதலனைப் பிரிந்துள்ள ஸ்ருதி, இப்போது துணைக்கு தன் அம்மாவை அழைத்து வந்துள்ளதாக்க கூறப்படுகிறது. அடடா... 'பெஸ்ட் மதர் அவார்ட்' ஒங்களுக்குத்தாங்க மேடம்!