கனடா தமிழ் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்கார்புரோவில் கிரீடம் மண்டபத்தில் இடம்பெற்றது.
காலை மணிக்கு கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றங்களுடன் மாவீரர் நாள் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து, பொதுச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் மாவீர ர் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக 2008 ஆம் ஆண்டு தாயகத்தில் தயாரான இறுவட்டு மாவீரர் பெற்றோர் ஒருவரினால் வெளியிடப்பட்டது.
மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு மாலை நிறைவுற்றது.