Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday 15 September 2012

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தேவையில்லை


ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தேவையில்லை. இண்டர் பேங்க் மொபைல் பெய்மெண்ட் சிஸ்டம்(ஐ.எம்.பி.எஸ்) என்ற புதிய வசதியின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவை மொபைல்போன் மூலம் எளிதாக செய்ய இந்திய ரயில்வே கேட்ரிங் மற்றும் சுற்றுலா துறை (ஐ.ஆர்.சி.டி.சி) அனுமதி அளித்துள்ளது.
ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்ய தற்போது பல வசதிகள் உள்ளன. நேரடியாக சென்று முன்பதிவு செய்வதற்கு பதிலாக, இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாதவர்களுக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இண்டர் பேங்க் மொபைல் பெய்மெண்ட் சிஸ்டம் (ஐ.எம்.பி.எஸ்) என்ற முறையின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், பணம் செலுத்த டெபிட் கார்டு, கிரேடிட் கார்டு ஆகியவை தேவைப்படாது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு கம்ப்யூட்டர் கூட தேவையில்லை.
இந்த புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. செல்போனில் இருந்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். டிக்கெட் முன்பதிவு செய்த நபரின் வங்கி கணக்கில் டிக்கெட் கட்டணத்திற்கான பணம் பிடித்தம் செய்யப்படும். இந்த வசதியை பெற விரும்பும் நபர்கள் தனது செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை பதிவு செய்து, மொபைல் பண பரிவர்த்தனைக்கான குறியீடு (எம்.எம்.ஐ.டி) மற்றும் மொபைல் ரகசிய எண் ஆகியவை பெற்று கொள்ள வேண்டும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ரூ.5 ஆயிரம் வரையிலான பண பரிமாற்றம் செய்ய ரூ.5 கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய வசதியின் மூலம் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய உள்ள அனைத்து வசதிகளையும், செல்போன் மூலம் பெற முடியும்.