Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday 15 September 2012

அரசியல் நையாண்டி

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் ஆரோக் கியமாகப் பராமரிக்கப்படுகிறது என்பதற்கான அடையாளம், அங்கே கருத்து வெளிப் பாட்டுச் சுதந்திரம் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களால் மதிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் இந்தியாவில் மத்திய ஆட்சி பீடத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியோ விமர்சனங் களைக் கண்டு ஆத்திரவசப்படுகிறது. அந்த விமர்சனங்கள் யாரிடமிருந்து வந்தாலும் - அது தலைமை கணக்குத் தணிக்கையாளரானாலும் சரி, அரசியல் நையாண்டி ஓவியரானாலும் சரி - சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் நையாண்டி ஓவியரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தில் ஈடுபட்டிருப்பவருமாகிய அஸீம் திரிவேதி மஹாராஷ்டிரா மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் விமர் சனக் கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்கத் தயாராக இல்லாத மனப்போக்கையே காட்டுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், கருத்துச் சுதந் திரத்தை ஒடுக்குவதில் காங்கிரசுக்குக் கொஞ் சமும் சளைக்காத பாஜக - சிவசேனா வகை யறாக்கள் என பல்வேறு கட்சிகளும் திரிவேதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளன. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே, நேரடியாக இந்தக் கைது நடவடிக்கையை ஆத ரிப்பது போல் காட்டிக் கொள்ளவில்லையானா லும், மறைமுக மாக “கருத்துச் சுதந்திரம் உண்டு என்றாலும் கூட நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டுத்தான் எவரும் செயல்பட வேண்டும்” என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

எங்கும் எதிலும் ஊழல்மயமாகிவிட்டது என்ற கருத்தை, அசோகச் சின்னத்தில் மூன்று சிங்கத் தலைகளுக்கு பதிலாக ஓநாய்த் தலை களை வரைந்து, நாடாளுமன்றம் ஊழல் பேர் வழிகளால் பெரியதொரு கழிப்பிடமாக மாற்றப் பட்டு விட்டது என்னும் வகையில் கேலிச்சித் திரமாக திரிவேதி சித்தரித்துள்ளார். சில மாதங் களுக்கு முன் மும்பையில் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின்போது அந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த ஓவியங் ளைத் தீட்டியது தேச விரோதச் செயல் என்று ஒரு இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படை யில் காவல் துறையினர் ஓவியரைக் கைது செய் தார்கள். அந்த ஓவியங்களின் தன்மை குறித்து ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள் இருக்கலாம். ஆனால், அவற்றை எப்படி தேச விரோதம் என்றோ, பகை வளர்க்கும் செயல் என் றோ கூற முடியும்? நிச்சயமாக அந்த இளைஞர், நிலக்கரி ஊழலை அம்பலப்படுத்திய தலை மைக் கணக்குத் தணிக்கையாளரை காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகத் தாக்கி வருவ தன் தாக்கத்திலும், ஊழல் எதிர்ப்பு இயக்கங் களைக் கண்டு காங்கிரசார் வெளிப்படுத்தும் வெறுப்பின் ஊக்கத்திலுமே இப்படியொரு புகா ரைப் பதிவு செய்திருப்பார் என்பதை ஊகிப்பது கடினமல்ல. ஏற்கெனவே திரிவேதியின் அரசி யல் ஓவியங்களுக் கான வலைத்தளம் முடக்கப் பட்டிருக்கிறது.

நாடு தழுவிய அளவில் எதிர்ப்பின் பின்ன ணியில், மகாராஷ்டிரா மாநில முதலமைச் சரும் உள்துறை அமைச்சரும் இந்தக் கைது நடவடிக் கையில் தங்களுக்குச் சம்பந்தமில்லாதது போல், திரிவேதி மீதான தேசவிரோதக் குற்றச் சாட்டை விலக்கிக்கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இப்படியொரு மோசமான நடவடிக்கைக்குக் காரணமானவர் கள் யாரானாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கலை வடிவங்களில் அரசியல் விமர்சனம் செய்யும் உரிமையை தடுத் திடக்கூடாது; உயர்த்திப்பிடிக்க வேண்டும்.