Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 13 September 2012

மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து என்னை பேச வைத்தே என் பேங்க் பேலன்ஸ் பூராத்தையும் காலி பண்ணிடறா...


முடிந்தவரை முன்கதைச் சுருக்கம் கேட்காத, அழகை மறைமுகமாக வர்ணிக்கிற ஆண்கள் எளிதில் பெண்களை கவர்ந்து விடுகிறார்கள். காதலி கல்லூரியில் படிப்பவர் என்றால், பள்ளி நாட்களில் யாரையாவது காதலித்தது உண்டா? என்று கேட்கிற காதலனை அவளுக்குப் பிடிக்காது.

இவன் சந்தேகப் பிராணி என்பதாக அப்போதே முடிவு செய்து அவன் மீதான பிடிப்பையும் அப்போதே விலக்கிக் கொண்டு விடுகிறாள்.ஆண்கள் பற்றிய பெண்கள் கணிப்பில், தங்கள் விருப்பத்துக்குரியவன் தன்னை நேசித்த இதயத்தில் இன்னொரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.

இதில் மட்டும் எல்லாக் காலத்திலும் பெண்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள். காதலை பொழுதுபோக்காக வைத்துக் கொள்பவர்கள் இரு தரப்பிலும் தான் உண்டு. அதற்காக காதலே பொழுதுபோக்காக இருந்து விடாது என்பதை நிறைவேறாத காதலுக்காக இப்போதும் உயிரை விடும் காதலர்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

அதுமாதிரி அற்ப விஷயத்துகாக காதலை கட்செய்பவர்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வருத்தமான உண்மை. ஒரு இளைஞனிடம் இன்னொரு இளைஞன் மெரினா கடற்கரையில் இப்படி விசாரித்துக் கொண்டிருந்தான்.உங்க காதல் கட் ஆயிட்டது போலிருக்கே? என்ன காரணம்? அடுத்தவன் சொன்னான்: மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து என்னை பேச வைத்தே என் பேங்க் பேலன்ஸ் பூராத்தையும் காலி பண்ணிடறா...