Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 7 September 2012

கோச்சடையானில் ரஜினியுடன் அஜித்

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தின் பாடல்கள் ஜப்பானில் வெளியாகுவது அனைவரும் அறிந்ததே. இந்த விழா அக்டோபர் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த விழாவை பற்றி அறிந்த அஜித் விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து தானும் அந்த விழாவில் பங்கேற்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தனது படங்களின் விளம்பரங்களிலே தலை காட்டாத தல, ரஜினி படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வருவதாக தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஆனால் தற்பொழுது அஜீத் ரஜினியை கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கிறார் என்பது அவரது பேட்டிகளிலும் செயல்களிலும் நன்றாகவே தெரிகிறது. அதே போல் ரஜினியும் அஜித் மேல் பாசமும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.