Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Wednesday, 5 September 2012

அஜித்தின் ’வத்திக்குச்சி’யை இயக்கும் முருகதாஸ்!

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. துப்பாக்கி நவம்பர் மாதம் ரிலீஸ் என்பது கோடம்பாக்கத்தின் பேச்சாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான தீனா படத்தில் அஜித் நடித்திருந்தார். தீனா படம் அஜித்துக்கு ஒரு பெரிய திருப்புமுனை என்றால், அந்த படத்தில் வரும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ என்ற பாடல் பல ரசிகர்களிடம் அஜித்தை கொண்டுபோய் சேர்த்தது.

அவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்கிய அந்த சொல்லை தனது அடுத்த படத்தின் டைட்டிலாக பயன்படுத்துகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார்.