Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Wednesday, 5 September 2012

குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக உதவுவாரா ரஜினி!

பெங்களூரில் ‘பரிக்ரமா’ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 160 சமூக ஆர்வலர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட 1320 குழந்தைகளுக்கு கல்வி அறிவு வழங்கிக்கொண்டிருக்கிறது இந்த பரிக்ரமா தொண்டு நிறுவனம்.

திரையுலக நட்சத்திரங்கள் படங்களில் உபயோகப்படுத்திய துணிகளை அவர்களது கையெழுத்துடன் பெற்று, குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக அவற்றை ஏலம் விடுவது பரிக்ரமா தொண்டு நிறுவனத்தின் வழக்கம்.



அதற்காக இம்முறை தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பலமொழி முன்னணி நடிகர்களிடமிருந்தும் அவர்களது துணிகளை கேட்டு கடிதம் எழுதியிருந்தது பரிக்ரமா. விக்ரம், சூர்யா, தனுஷ், மாதவன், த்ரிஷா உட்பட பல தமிழ் நடிகர் நடிகைகளும், இந்தி திரையுலக ஜாம்பாவான் அமிதாப் பச்சனும் அவர்களது துணியை, தங்களது கையெழுத்துடன் பரிக்ரமாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பரிக்ரமாவின் இந்த முயற்சியை வாழ்த்தி கடிதம் ஒன்றை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். ரஜினிகாந்தின் ஜீன்ஸ் பேண்ட் என்றால் ரசிகர்கள் ஆர்வத்துடன் அதிக விலைக்கு வாங்குவார்கள்.

அந்த பணமும் மேலும் சில குழந்தைகளின் படிப்பிற்கு உபயோகமாக இருக்கும். ஆனால் சமீபமாக ரஜினி எப்போது என்ன செய்வார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. ரஜினியின் இந்த உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது பரிக்ரமா.