
இப்போதுள்ள கால கட்டத்தில் பெண்களும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பொதுவாக அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிராக வன்முறைகளும், பாலியல் தொந்தரவுகளும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இதற்காக எல்லாம் வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் நிலையில் இன்றைய பெண்களும் இல்லை. பொருளாதார சூழ்நிலையும் இல்லை. சரி இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிப்பது எப்படி? என்று சில டிப்ஸ்
* அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண் நண்பரிடம் எந்த சொந்த விசயங்களை பற்றியும் பேசாதீர்கள். இதனால் அவர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு தவறாக நடக்க வழி வகுக்கும்.
* சில பெண்கள் தாங்களாகவே, சில சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர். <உதாரணமாக, ஜோவியல் பேர்வழி என்று கூறிக் கொண்டு வரையறை இன்றி, பல விஷயங்களைப் பற்றி சக ஆண் ஊழியர்களிடம் பேசும் போது, அவர்களும் அதற்கேற்றவாறு தங்கள் எல்லைகளை விரித்துக் கொள்ளலாம். அப்படி நீங்கள் பேசிவிட்டு அவர்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. எனவே, நீங்கள் சக ஆண் அலுவலர்களிடம் பேசும் போது, அதற்கான வரையறையை சரியாக வகுத்துக் கொள்ளுங்கள்.
* ஆண்களை எதிரியாக பாவித்தால், சக ஆண் பணியாளர் சாதரணமாக பேசினாலோ அல்லது நகைச்சுவையாக பேசினாலோ கூட அது தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளத் தான் தோன்றும். எனவே, ஆண்களை எதிரியாகவோ அல்லது ஆண்கள் அனைவருமே தவறானவர்கள் என்ற எண்ணம் கொண்டவராகவோ நீங்கள் இருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
* இப்படியெல்லாம் நீங்கள் கவனமாக இருந்தும் பிரச்னை உங்களை தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம், அவரது செய்கை <உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தயங்காதீர்கள். அப்படியும் பிரச்னை தொடந்தால், உங்கள் உயரதிகாரியிடம் புகார் அளிக்க தயங்காதீர்கள்.