Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 7 September 2012

இடியும் நிலையில் இருந்த ரஜினிகாந்த் படித்த பள்ளிக்கூடம் சீரமைப்பு

ரஜினிகாந்த் சிறு வயதில் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள கவிபுரம் துவக்க பள்ளிக்கூடத்தில் படித்தார். இப்பள்ளிக்கூடம் தற்போது பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது.

இதையடுத்து பள்ளிக்கூடத்தை சீரமைத்து புதுப்பிக்க கர்நாடக அரசு கல்வித்துறையும், உள்ளூர் மக்களும் முடிவு செய்துள்ளனர். அந்த ஊரில் வசிக்கும் பலர் ரஜினியின் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அனைவரும் இணைந்து பள்ளியை புதுப்பிக்க கமிட்டி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமாரும், அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார். பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டவும் ஏற்கனவே உள்ள கட்டிடங்களை புதுப்பிக்கவும் நிதி திரட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

பள்ளி சீரமைப்பு பணிகள் ஆறு மாதத்தில் முடிந்து விடும் என்று அனந்தகுமார் தெரிவித்தார். பணிகள் முடியும் வரை மாணவ-மாணவிகளை பக்கத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட உள்ளனர்.