Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 13 September 2012

நிலை தடுமாறிய நாயகி கடலுக்குள் விழுந்தார்-காவலன் மித்ரா குரியன்

காவலன் திரைப்படத்தில் நாயகி அசின் தோழியாக நடித்திருப்பர் மித்ரா குரியன். தற்போது இவர் நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி ராவ் நடிக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் ஷியாமளன் இயக்குகிறார். அண்மையில் இந்தப்படத்தின் 'காதல் நதிக் கரையோரம்' என்ற பாடல், ஆலப்புழையில் உள்ள பேக்வாட்டர் பகுதியில் படமாக்கப்பட்டது. இதில் சிவாஜி தேவும், மித்ரா குரியனும் படகு ஒன்றில் டூயட் பாடியவாறு சென்றுள்ளனர். இதனை மற்றொரு படகில் இருந்த இயக்குனர் ஷியாமளன் அடங்கிய படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அப்போது எதிர் திசையில் வந்த ராட்சத படகு ஒன்று நாயகன், நாயகி இருந்த படகை உரசிச் சென்றது. இதில் நிலை தடுமாறிய நாயகி கடலுக்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உதவி கேட்டு கூச்சல் இட்டுள்ளனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் நீரில் விழுந்த மித்ராவை காப்பாற்றியுள்ளனர்.