Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 15 September 2012

டீன் ஏஜ் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பம்


* டீன் ஏஜ் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பம் அந்நிய ஆடவர்களினால் எற்படும் பாலியல் தொந்தரவுதான். இதனால் எண்ணற்ற பெண்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனச்சிதைவுக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் பெண் குழந்தைகளின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு அன்பான ஆறுதலான வார்த்தைகளால் வாழ்வின் சூட்சுமத்தை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.



* டீன் ஏஜ் பருவத்தில்தான் எதையும் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கூட கேட்க மறுத்து தங்கள் இஷ்டம் போல செயல்பட தொடங்குவார்கள். எனவே டீன் ஏஜ் பெண்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பதை விட அன்பினால் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.