Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, 11 September 2012

இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது

இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை. ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்?

என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான். இந்த சட்டம் வருவதற்கு முன்பு இந்து பெண்கள் சொத்து சட்டம் என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது.

சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது. 1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது.

உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.