Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, 4 September 2012

முத்த காட்சியா?

ஆசாமி படத்தில் நடித்த ஸ்ரீ பிரியங்கா, அடுத்து, நிலா மீது காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். பாண்டிச்சேரியை சேர்ந்தவரான இவருக்கு, வெளிமாநில நடிகைகளே, முன்னணி வகிக்கும் தமிழ் சினிமாவில், தமிழ் நடிகைகளும் சாதிக்க வேண்டும் என்பதே ஆதங்கமாக உள்ளது. அவரிடத்தில், தற்போது நடிகைகள், சினிமாவில் சாதிக்க, திறமை காட்டுவது மட்டுமன்றி, நீச்சல் உடை, முத்தக்காட்சி என்றெல்லாம் புகுந்து விளையாட வேண்டுமே... நீங்கள் எப்படி? என, கேட்டால், நீச்சல் உடை, முத்தக்காட்சி பக்கமெல்லாம், தலை வைத்தே படுக்க மாட்டேன். என் திறமைக்கு சவால் விடக்கூடிய படங்களில் மட்டுமே நடிப்பேன், என்கிறார். மேலும், ஒருவேளை, நான் எதிர்பார்க்கும் வேடம் கிடைக்கவில்லை என்றால், தற்போது, பிளஸ் 2 படித்து வரும் நான், நடிப்பை ஏறக்கட்டிவிட்டு, மேல்படிப்பை தொடர்ந்து விடுவேன், என்கிறார்.