ரஜினிகாந்த நடிக்கும் கோச்சடையான் படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கிவருகிறார். கோச்சடையான் ரிலீஸுக்கான எல்லா பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பற்றி பேசிய இயக்குனர் சௌந்தர்யா “ கோச்சடையானில் பல காலம் கடந்தாலும் ரஜினியை ரஜினியாகவே காட்ட முயற்சி செய்திருக்கிறோம். அதற்காக அதிகப்படியாக எதையும் சேர்க்கவில்லை. ரஜினி தனது ரசிகர்களை தனது ஒவ்வொரு அசைவின் மூலமாகவும் கவர்ந்திருக்கிறார்.
என் அப்பாவை ரஜினியாகவே காட்டியிருக்கிறோம். ஒரு நடத்துனராக இருந்து, மொழி தெரியாத இடத்திற்கு வந்து தன் சொந்த முயற்சியில் வளர்ந்திருக்கும் என் தந்தை தனது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விருப்பப்பட்டாரோ அதையே படத்தில் கூறியிருக்கிறோம். லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், அவதார் வரிசையில் கோச்சடையான் வரும் என்பதில் நம்பிக்கை இருக்கிறத்” என்ரு கூறியுள்ளார்