Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 8 September 2012

சூர்யா நடிக்க வந்து இன்றுடன் 15 வருடம் ஆகிறது

இயகுனர் கே.வி.ஆனந்த் இயகத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் மாற்றான். பலவித புது முயற்சிகளையும். புது தொழில்நுட்பங்களையும் உபயோகப்படுத்தி கடின உழைப்புடன் உருவாகியிருக்கும் மாற்றான் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.

சூர்யாவிற்கு தெலுங்கில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லாவிட்டாலும் காஜல் அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள். காஜல் அகர்வால் தோன்றினாலே விசில் சத்தம் தியேட்டரையே பறக்கவிடும் அளவிற்கு செய்துவிடுவார்கள் காஜலின் ரசிகர்கள். எனவே மாற்றான் படத்தை தெலுங்கில் “பிரதர்ஸ்” என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள்.

சூர்யா முதல்முறையாக தனது சொந்தக் குரலிலேயே தெலுங்கில் பேசவிருக்கிறார். சூர்யா தன் குரலிலேயே டப் செய்வதால் இந்த படத்திற்கு தெலுங்கிலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சூர்யாவிற்கு இன்று ஒரு முக்கியமான நாள். சூர்யா நடிக்க வந்து இன்றுடன்(06.09.12) 15 வருடம் ஆகிறது. 06.09.1997 -ல் நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகமானார்.