கேமரா உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிவரும் கெனான் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய பாயின்ட் சூட் கேமராக்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த கேமராக்களுக்கு கெனான் பவர்ஷாட் எஸ்எக்ஸ்160 ஐஎஸ் மற்றும் எஸ்எக்ஸ்500 ஐஎஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு கேமராக்களும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக எஸ்எக்ஸ்160 ஐஎஸ் கேமரா 16எம்பி பம்ப் மற்றும் சிசிடி டைப்பில் வரும் சென்சார் மற்றும் டிஜிக் 4 ப்ராசஸிங் சிப்பைக் கொண்டுள்ளது.
இதன் லென்ஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. அதாவது இந்த லென்ஸ் நீண்ட தொலைவில் இருப்பவற்றையும் மிகத் தெளிவாகக் காட்டும். மேலும் இந்த கேமரா மிக ஸ்டைலாக வருகிறது.
அடுத்ததாக எஸ்எக்ஸ்500 ஐஎஸ் கேமரா முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இந்த கேமரா குறைந்த விலையில் வருகிறது. 16எம்பி சிசிடி சென்சார் வசதியுடன் வரும் கேமரா மிகத் துல்லியமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் சக்தி வாய்ந்தது.
விலையைப் பொருத்தமட்டில் எஸ்எக்ஸ்160 ஐஎஸ் கேமரா 329.99 அமெரிக்க டாலர்களுக்கும், எஸ்எக்ஸ்500 ஐஎஸ் 229.99 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.