Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 26 August 2012

350 கி.மீ. பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி 2 ஏவுகணை

அணு ஆயுதங்களுடன் 350 கி.மீ. பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி 2 ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, முதல்முறையாக 1996ம் ஆண்டு சோதிக்கப்பட்டது. பின்னர் திறத்தன்மையை ஆய்வு செய்வதற்காக அடிக்கடி சோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இன்று காலை பிருத்வி 2 ஏவுகணை சோதிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 9 மீட்டர் நீளம், 1 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஏவுகணை, 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.