Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 7 June 2012

தல தல தான்

அஜித் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று பார்வதி ஓமணக்குட்டன் கூறியுள்ளார். வெள்ளை மார்பிளில் செய்த சிலை போல வசீகர புன்னகையோடு, வாட்ட சாட்டமான உடல் அழகோடு கண்காட்சியில் வைத்த பொம்மை போல அழகாக இருக்கிறார். 'பில்லா-2' படத்தில் அஜித்துடன் அமர்க்களமாக அறிமுகமாகியுள்ள பார்வதி ஓமணக்குட்டன் நம்மிடம் பேசியதாவது, தமிழ் சினிமா மிகப்பெரிய இண்டஸ்ட்ரீ. இங்கு திறமையான சிரத்தை எடுத்து வேலை பார்க்கும் மக்கள் அதிகம் இருக்காங்க. அவர்களோடு சேர்ந்து நானும் வேலை பார்ப்பது ஒரு இனிய அனுபவம். என்னுடைய முதல் அறிமுக படமே அஜித் சார் படம் என எண்ணும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நினைத்தாலே பெருமையாக இருக்கு. அஜித் பற்றி சொல்லணும் என்றால் அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல நடிகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய உதவிகள் செய்வார். என்ன மாதிரியான புதுமுகங்களுக்கு அவர் ரொம்ப சப்போர்ட்ட பண்ணுவார். 'பில்லா-2' படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கும். இப்படி ஒரு தமிழ் சினிமாவில் நானும் ஒரு பார்ட்டா இருக்கேன் என்று நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. அஜித் படத்தில் அறிமுகமாக நான் கொடுத்து வைத்திருக்கிறேன். மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் கூறுவது போல தல தலதான் என்று சொல்லி முடித்தார். பட்டாம்பூச்சிக்கு பெருமிதத்த பாருங்கப்பா.....?!