Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 7 June 2012

பில்லா 2,சகுனி படங்களின் வெளியீட்டுத் திகதிளும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் பில்லா 2. இதே போலவே சந்தானம் கார்த்தி ஜோடி இணைந்து கலக்கியிருக்கும் படம் சகுனி. இவ்விரு படங்களின் வெளியீட்டுத் திகதிளும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பில்லா 2 இந்த மாதம் 22ம் திகதியும், சகுனி திரைப்படம் இரண்டு வாரங்களின் பின்னரும் அதாவது அடுத்த மாதம் 6ம் திகதியும் வெளிவருகிறது.
இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாகவும் உள்ளன.கடந்த சில மாதங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் வரவில்லை. ஐ.பி.எல்.கிரிக்கெட்டால் அவற்றை நிறுத்தி வைத்து இருந்தனர்.


தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ‘பில்லா 2′, ‘சகுனி’ படங்கள் வருகிறது. ‘பில்லா 2′-வில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். சாதாரண இளைஞன் பயங்கர தாதாவாக மாறுவதே இப் படத்தின் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துள்ளது.
சகுனியில் கார்த்தி ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார். சங்கர் தயாள் இயக்கி உள்ளார். ‘இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அரசியல் கதையாக சகுனி தயாராகி உள்ளது.