Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 26 May 2012

இளையதளபதி விஜய்யின் காமெடி:திடீர் முடிவு!!

அடுதடுத்த தோல்விகளால் தனது முழுக் கவனத்தையும் சினிமாவில் செலுத்திவருகிறார் விஜய். குறிப்பாக முன்பெல்லாம் புதிய
இயக்குனர்களைத்தான் தனது படத்திற்கு தேர்ந்தெடுத்து வந்தார். ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது.
இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படமும் சரி
இனிமேல் நடிக்க இருக்கும் படங்கள் எல்லாமே பெரிய பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில்தான்.
ஏ ஆர் முருகதாஸ், கவுதம் மேனன், ஏ எல் விஜய் படங்களில் நடிக்கும் விஜய், அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஆசைப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை உடனே தொடங்க ஆசைப்படுகிறாராம் விஜய். காரணம், ஒரு முழு நீள காமெடி படம் தந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் தருகிறாராம் விஜய். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்கிறார்கள்.
ஆனால் அடுத்து கார்த்தியை வைத்து படம் பண்ணத் திட்டமிட்டுள்ள ராஜேஷால் உடனடியாக இந்தப் படத்துக்கு வர முடியாது என்பதால், விஜய் படம் தொடங்க சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். அநேகமாக யோகனை முடித்துவிட்டு விஜய் இந்தப் படத்தை ஆரம்பிக்கக் கூடும் என்று தெரிகிறது.