ஐ.பி.எல் கிரிக்கெட் ஆரம்பித்ததில் இருந்து சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை கிரிக்கெட் மோகம் பற்றிக்கொண்டுவிட்டது.
இந்நிலையில் நடிகை திரிஷாவிற்கு சச்சின் தெண்டுல்கர் கையெழுத்திட்ட பேட் ஒன்று தனக்கு கிடைத்துள்ளதாகக் கூறி மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிக்கிறார்.தனியார் நிறுவனம் ஒன்று முக்கிய பிரமுகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை
அனுப்பியுள்ளது. திரிஷாவுக்கும் அந்த பேட் வந்துள்ளது. இதுபற்றி நடிகை திரிஷா தெரிவித்ததாவது.
சச்சின் தெண்டுல்கர் விளம்பர தூதராக உள்ள நிறுவனம் ஒன்று அவர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை வாங்கி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. எனக்கும் வந்துள்ளது. இது மறக்க முடியாத பரிசு.
நான் கிரிக்கெட் ரசிகை அல்ல. ஆனால் சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும். அவர் அற்புதமான மனிதர். நாகரீகம் தெரிந்தவர். சில பிரபலங்களை நமக்கு பிடிக்கும். ஏன் என்று சொல்ல தெரியாது. அதுபோல் சச்சின் மேல் எனக்கு பற்று உள்ளது.