வடிவேலு, விவேக்கை விட கோடம்பாக்கத்தில் இப்போதைக்கு பவர்ஃபுல்லான காமெடியன் 'பவர்ஸ்டார்' சீனிவாசன் தான். சீன் கூட தேவையில்லை இவர் ஸ்டில்லைப்பார்த்தாலே விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். லத்திகா வுக்குப்பிறகு சற்று அமைதி காத்த பவர்ஃபுல் புயல் இப்போது மறுபடியும் வீச ஆரம்பித்துவிட்டது. அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களோடு.
'பொல்லாதவன்' துவங்குவதற்கு தனது முதல் படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் வைத்திருந்த டைட்டில் 'தேசிய நெடுஞ்சாலை' இந்த டைட்டிலை எப்படியோ கைப்பற்றி தனது ஆக்�ஷ்ன் ரணகளத்துக்கு சூடிக்கொண்டுவிட்டார் பவர்ஸ்டார்.
இன்னொரு படத்தின் பெயர் 'மன்னவன்'. இதில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாத போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் பவர். நடிகை ஃபுளோராவுடன் மூன்று டூயட் பாடுகிறாராம்.
போலீஸ் அதிகாரியின் மனைவி என்பதை மறந்து அநியாயத்துக்கு கவர்ச்சிகளை அள்ளித்தெளீத்திருக்கிறாராம் ஃபுளோரா. ஆமா வீட்டுக்காரரே பொறுப்பில்லாம திரியிறப்ப, இவங்களும் கொஞ்சம் கிளாமரா இருந்தா என்ன தப்பாம்?