Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 3 December 2011

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு திராவிட் கேப்டன்

5-வது ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராகுல் திராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் 4-வது ஐபிஎல் போட்டியோடு அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து இப்போது திராவிடுக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகையுமான ஷில்பா ஷெட்டி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "வாழ்த்துகள் திராவிட். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் நீங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெருமைத் தேடித் தருவீர்கள் என்று நம்புகிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.
முதல் 3 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய திராவிட், கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியால் ரூ 2.5 கோடிக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடிய திராவிட், 12 ஆட்டங்களில் 343 ரன்கள் குவித்தார்.