Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 12 November 2011

த்ரிஷா அவுட் ஸ்ரேயா இன்

தமிழ், தெலுங்கு, இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் அறிமுகமாக காத்திருந்தார் த்ரிஷா. பிருத்விராஜ் நடிக்கும் ‘ஹீரோÕ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை கேட்டு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க இயக்குனர் தீபன் முடிவு செய்தார். ஆனால் பிற படங்களில் பிஸியாக இருப்பதால் நவம்பரில் கால்ஷீட் தர இயலாது என்றார் த்ரிஷா. இதனால் ஷூட்டிங் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் இருந்து விலகி கொள்வதாக த்ரிஷா கூறிவிட்டார். த்ரிஷாவின் திடீர் முடிவால் திணறிய இயக்குனர் ஸ்ரேயாவை அணுகினார். அவரிடம் கதை சொன்னார். பிடித்திருந்ததையடுத்து நடிக்க சம்மதித்தார். கேட்ட தேதியில் கால்ஷீட்டும் தந்தார். ஸ்ரேயா நடிப்பதை உறுதி செய்த இயக்குனர், திட்டமிட்டபடி நவம்பரில் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மம்மூட்டி, ப்ருத்விராஜ் நடித்த ‘போக்கிரி ராஜாÕ, மோகன்லாலுடன் ‘கேசனோவாÕ ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா இது மலையாளத்தில் நடிக்கும் 3வது படம்.