
டப்பிங்கோ, ரீமேக்கோ தேவைப்படாமல் நேரடியாக தமிழ்ப்படங்களை வெளியிட்டு கலெக்ஷன் ஈட்டுகிற மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அதிலும் பெங்களூரில் திரையிடப்படும் தமிழ் படங்கள் கணிசமான கலெக்ஷனை தந்து வருகின்றன. இந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள் பெங்களூரில். அங்கு ஓடுகிற தமிழ் படங்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்திருக்கிறது கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு. ராஜ்யோத்சவா தினம் என்றொரு விழாவை கொண்டாடி வருகிறார்களாம் அவர்கள்.
இதனால் இந்த மாதம் முழுக்க எந்த தியேட்டரிலும் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிலிம் சேம்பருக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, வேலாயுதம் படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்குள்ளும் புகுந்து படத்தை நிறுத்திவிட்டார்கள். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு கலைந்து சென்றிருக்கிறார்கள்.