
பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கியது. கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
விருகம்பாக்கத்தை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 30 பேர், 3 மாட்டு வண்டிகளில் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘பஸ்சில் வர எங்களுக்கு வசதி இல்லை, அதனால் மாட்டு வண்டியில் வந்துள்ளோம். இனிமேல் மக்கள் எல்லோரும் மாட்டு வண்டியில்தான் செல்ல வேண்டும். பணக்காரர்களுக்குதான் பஸ். அனைவருக்கும் பெஸ்ட் மாட்டு வண்டிதான்’’ என்று கூறி, மாட்டு வண்டிகளை ஓரமாக நிறுத்தி விட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.