
மன்மதன் அம்பு படத்திற்குப் பிறகு உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் படம் "விஸ்வரூபம்'. இப் படத்தில் தீவிரவாதியாக நடிக்கிறார் கமல்.
தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் ஆப்கனில் இயங்கி வரும் முஜாஹிதீன் தீவிரவாதியாக நடித்து வருகிறாராம் உலக நாயகன் கமலஹாசன்.
இப்படத்தில் அமெரிக்காவாழ் இந்தியரான பூஜா குமார், இந்திய மாடல் அழகி இஷா ஷெர்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றது மட்டுமின்றி நடித்தும் வருகிறார் கமலஹாசன்.