Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 24 November 2011

காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்க செய்ய திட்டம் தயார்


திருட்டு மற்றும் காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்கச் செய்ய தேவையான பரிந்துரைகளை டிராய்' விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் அமைப்பு சாரா செல்போன் சந்தையை கட்டுக்குள் கொண்டு வருவதும் டிராயின் முக்கிய நோக்கமாக உள்ளது.செல்போன்களுக்கு, சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ எம் இ ஐ) அதன் தயாரிப்பாளர்களால் வழங்கப்படுகிறது. இந்த எண் செல்போன் சேவை நிறுவனங்களின் பதிவேட்டில் பதிவாகி இருக்கும். இவ்வகை எண்களை கொண்டு திருடப்படுகிற அல்லது காணாமல் போகிற ஒரு செல்போனின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு அதனை செயலிழக்க செய்ய முடியும்.

இதன் சாத்தியக்கூறுகளை ஆய்ந்து தகவல் தருமாறு, கடந்த ஆண்டு செல்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களை டிராய் கேட்டிருந்தது.

தற்போதைய வசதிகளை பயன்படுத்தி, காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்க செய்ய இயலாது. ஆனால் சிம் கார்டுகளை செயலிழக்க செய்வது சாத்தியம் என டிராய் அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.